/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை மணிமுத்தாறில் ஐப்பசி முதல் தீர்த்தவாரி
/
தேவகோட்டை மணிமுத்தாறில் ஐப்பசி முதல் தீர்த்தவாரி
ADDED : அக் 19, 2025 05:46 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் ஐப்பசி முதல் நாளும், கடைசி நாளும் நகர், மற்றும் அருகில் உள்ள கோயில்களில் இருந்து சுவாமிகள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்வது மரபு. ஐப்பசி முதல் நாளான நேற்று அதிகாலையில் கைலாச விநாயகர் கோயிலில் இருந்து விநாயகர் மணிமுத்தாறுக்கு சென்று தீர்த்த வாரி செய்தனர்.
காலை 10:00 மணியளவில் சிலம்பணி சிதம்பர விநாயகர் , மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், கோதண்டராமர், ரஙகநாதர் பெருமாள், கிருஷ்ணர் அருகில் உள்ள கோட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயில்களில் இருந்து சுவாமிகள் வழியாக வலம் வந்து மணி முத்தாறில் எழுந்தருளினர். அட்சரத்தேவர்களுக்கும், சக்கரத்தாழ்வார்களுக்கும் பல வேறு அபிேஷகம் நடந்தன. பூஜை, தீபாராதனையை தொடர்ந்து சுவாமிகள் ஊர்வலமாக நகர் கோட்டையம்மன் கோயில் அருகே வந்தன. அங்கு சிறப்பு தீபாராதனை நடந்ததை தொடர்ந்து ஒவ்வொரு சுவாமியும் பிரியாவிடை பெற்று தங்கள் கோயில்களுக்கு திரும்பினர்.