/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலை: பேக்கரி 'சிசிடிவி' பதிவு கைப்பற்றல்
/
அஜித்குமார் கொலை: பேக்கரி 'சிசிடிவி' பதிவு கைப்பற்றல்
அஜித்குமார் கொலை: பேக்கரி 'சிசிடிவி' பதிவு கைப்பற்றல்
அஜித்குமார் கொலை: பேக்கரி 'சிசிடிவி' பதிவு கைப்பற்றல்
ADDED : ஜூலை 22, 2025 12:27 AM

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக நேற்று மாலை பைபாஸ் ரோடு பேக்கரி 'சிசிடிவி' பதிவுகளை சி.பி.ஐ., சேகரித்தனர்.
நகை திருட்டு புகாரில் போலீஸ் விசாரணையின் போது இறந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.,யினர் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் ஜூலை 12 முதல் விசாரித்து வருகின்றனர். ஜூன் 27ல் புகார் செய்த நிகிதா கொடுத்த அன்று இரவு திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை அழைத்து கொண்டு பைபாஸ் நரிக்குடி ரோட்டில் உள்ள பேக்கரிக்கு தான் சென்றுள்ளனர். அன்று எவ்வளவு நேரம் பேக்கரியில் இருந்தனர். அஜித்குமாரை அழைத்து வந்த போலீசார் யார், யார், அன்று இரவு அஜித்குமாரை சித்ரவதை செய்தனரா, அஜித்குமார் காயம்பட்ட நிலையில் இருந்தாரா என ஒரு மணி நேரம் ஐந்து பேர் கொண்ட சி.பி.ஐ., குழு விசாரணை செய்தது.
பேக்கரியில் உள்ள நான்கு 'சிசிடிவி' கேமராக்களில்  ஜூன் 27ல் பதிவான அனைத்தையும் சேகரித்துள்ளனர். அன்றைய தினம் பேக்கரியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சி.பி.ஐ.,யினர் பின் மதுரை  சென்றனர்.

