/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் ஆப்சென்ட்
/
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் ஆப்சென்ட்
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் ஆப்சென்ட்
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் ஆப்சென்ட்
ADDED : அக் 29, 2024 06:59 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை.
இப்பல்கலை.,யின் 35 வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் பவன்குமார் சிங் பேசினார். பல்கலை துணைவேந்தர் க.ரவி வரவேற்று பல்கலையின் சாதனைகள் குறித்து பேசினார்.
விழாவில் 3 பேருக்கு அறிவியல் அறிஞர் பட்டமும், 93 பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு துறைகளில் பயின்ற 42 ஆயிரத்து 433 மாணவ மாணவியருக்கு பட்டமும் வழங்கப்பட்டன.
இதில் 277 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்களில் 3 அறிவியல் அறிஞர் பட்ட ஆய்வாளர்களும், 93 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், 181 ரேங்க் பெற்றவர்களும் தங்கப்பதக்கம் பெற்றவர்களும் அடங்குவர். பதிவாளர் செந்தில்ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.