ADDED : மார் 22, 2025 04:55 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், கலெக்டர்பி.ஏ.,(பொது) முத்துகழுவன் முன்னிலை வகித்தனர். தேர்தல் தாசில்தார் மேசியதாஸ் வரவேற்றார். தாசில்தார்கள்காளையார்கோவில் முபாரக் உசேன், காரைக்குடி ராஜா, தேவகோட்டை சேதுநம்பு, திருப்புவனம் விஜயகுமார், மானாமதுரை கிருஷ்ணகுமார், திருப்புத்துார் மாணிக்கவாசகம், காரைக்குடி மாநகராட்சி கமிஷனர் சித்ரா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம், அனைத்து கட்சியினர் சார்பில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சோனை, நகர் தலைவர் விஜயகுமார், ஆம்ஆத்மி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, தி.மு.க., நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்கள்(தெற்கு) பாலையா, (வடக்கு இளைய கவுதமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பூத்களை பிரிப்பது, 2 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள பூத்கள் குறித்தும் தகவல் தெரிவித்தால், அருகில் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தனர். முன்னதாக ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பு கோடவுனில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.