ADDED : ஏப் 15, 2025 05:51 AM
சிவகங்கை: சிவகங்கையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பா.ஜ., சார்பில் நகர் தலைவர் உதயா, தேசிய பொதுக்குழு சொக்கலிங்கம், அ.தி.மு.க., சார்பில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, தி.மு.க., சார்பில் நகராட்சி தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், காங்., சார்பில் மாநில பொது செயலாளர் சுந்தரராஜன், நகர் தலைவர் விஜயகுமார், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலையா, துணை செயலாளர் முத்தரசு, பொருளாளர் பாஸ்கரன், தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சங்கரசுப்பிரமணியன், மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் பூமிநாதன், மாவட்டசெயலாளர் பெரியார் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்புத்துார்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் செயலாளர் வைகை பிரபா தலைமை வகித்தார். அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.க., மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் பிரம்மன், செங்குட்டுவன், முத்துக்குமார், சரவணபாண்டி, திலகவதி, ரத்தினம் பங்கேற்றனர். சுபா நன்றி கூறினார்.