ADDED : மார் 11, 2024 11:23 PM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் அ.ம.மு.க., சார்பில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்டித்தும், தடுத்து நிறுத்திட மாநில அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் எஸ்.ஏ.ரஹீம் வரவேற்றார் . ஒன்றிய செயலாளர்கள் கதிர், சிவா, முருகானந்தம், சிவராஜ் முன்னிலை வகித்தனர். மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ஏ.எல்.வெங்கடேசன் கோஷங்கள் எழுப்பினார்.
மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.சோமசுந்தரம், தேர்தல் பொறுப்பாளர் அம்சக்கண்ணன், மாநில செய்தி பிரிவு தொடர்பாளர் குரு.முருகானந்தம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பிஎல்.சரவணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் முருகன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் ராம.பூபதி, தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், நகர இளைஞரணி செயலாளர் பழனிகுமார் பங்கேற்றனர். நகர இணை செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

