/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஆவினில் அமோனியா வாயு கசிவு ஊழியர்களுக்கு கண் எரிச்சல்
/
சிவகங்கை ஆவினில் அமோனியா வாயு கசிவு ஊழியர்களுக்கு கண் எரிச்சல்
சிவகங்கை ஆவினில் அமோனியா வாயு கசிவு ஊழியர்களுக்கு கண் எரிச்சல்
சிவகங்கை ஆவினில் அமோனியா வாயு கசிவு ஊழியர்களுக்கு கண் எரிச்சல்
ADDED : அக் 19, 2024 03:13 AM

சிவகங்கை:சிவகங்கை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியா வாயு கசிவால் கண் எரிச்சலுடன் ஊழியர்கள் வெளியேறியதால் பதட்டம் ஏற்பட்டது.
சிவகங்கை அருகே 48 காலனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் செயல்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை, பக்குவப்படுத்தி காரைக்குடி ஆவினுக்கு அனுப்பி வருகின்றனர். நேற்றிரவு 7:30 மணிக்கு இந்த ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியா வாயு செல்லும் குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் அடைந்த ஊழியர்கள் அதனை விட்டு வெளியே ஓடினர். தீயணைப்பு நிலையஅலுவலர் அண்ணாமலை தலைமையில் கவச உடையில் வந்த வீரர்கள், அமோனியா வாயு கசிவை நிறுத்தினர். இதுகுறித்து காரைக்குடி ஆவின் நிர்வாகம் விசாரிக்கிறது.