/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
/
திருப்புவனத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
திருப்புவனத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
திருப்புவனத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
ADDED : மார் 04, 2024 05:28 AM

திருப்புவனம்: திருப்புவனம் தேரடி வீதியில் இருந்து வண்டல்நகர் வரையிலான கழிவு நீர் வாய்க்கால் 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருப்புவனம் தேரடி வீதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 200க்கும் குறைவான வீடுகளை உருவாகி இருந்தன. அதற்கு ஏற்றாற்போல கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் வழியாக நகரின் வெளியே கொண்டு செல்லப்பட்டது.
20 ஆண்டுகளில் 5வது வார்டில் இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உருவாகி விட்டன. அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி ரோடுகளில் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
5 வது வார்டு கவுன்சிலர் பாரத்ராஜா கூறியதாவது, ஜி.கே. வாசன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி 300 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
வாய்க்கால் கட்டும் பணியின் போது கழிவு நீர் தேங்காதபடி வெளியேற்ற தற்காலிகமாக பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டு மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்களே முன்வந்து அகற்றி கொண்டதால் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவு பெறும், என்றார்.

