/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெருவின் நடுவே மின்கம்பம் ஆட்டோ செல்ல முடியாமல் அவதி
/
தெருவின் நடுவே மின்கம்பம் ஆட்டோ செல்ல முடியாமல் அவதி
தெருவின் நடுவே மின்கம்பம் ஆட்டோ செல்ல முடியாமல் அவதி
தெருவின் நடுவே மின்கம்பம் ஆட்டோ செல்ல முடியாமல் அவதி
ADDED : டிச 03, 2024 05:45 AM

காரைக்குடி: கானாடுகாத்தான் பேரூராட்சியில் தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 10 வது வார்டில் ராஜா சர் தெரு உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீதிகளின் நடுவே இரண்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள் அவசரத்திற்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. தவிர ஆம்புலன்ஸ் கூட அப்பகுதிக்கு வர மறுக்கிறது. வயதானவர்கள் நடந்து செல்வதற்கு கூட சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து மக்கள் புகார் அளித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை.
எனவே மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.