sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஆந்திர எலுமிச்சை செடி ரூ.2500

/

 ஆந்திர எலுமிச்சை செடி ரூ.2500

 ஆந்திர எலுமிச்சை செடி ரூ.2500

 ஆந்திர எலுமிச்சை செடி ரூ.2500


ADDED : டிச 10, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 10, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று ஆந்திர மாநில எலுமிச்சை செடி ஒன்று இரண்டாயிரத்து 500 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர், டிசம்பரில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். வெயில் அதிகமாக இல்லாத நிலையில் பனிப்பொழிவும் இருப்பதால் மரங்கள், செடிகள் மிகவும் பசுமையாக வளர்ச்சியடையும், இந்த மாதங்களில் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்ச்செடிகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள், எலுமிச்சை, மா, பலா, தென்னை, கருவேப்பிலை, இட்லி பூ , ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகளை விற்பனை செய்வார்கள்.

மேலுாரைச் சேர்ந்த ஆண்டவர் என்பவர் நேற்று ஆந்திர மாநில எலுமிச்சை செடிகளை விற்பனை செய்தார்.

ஆண்டவர் கூறுகையில்: ஆந்திர மாநில எலுமிச்சை செடி ஹைபிரிட் வகையைச் சேர்ந்தது. காய்க்கும் திறனில் உள்ள இந்த ஒரு செடி இரண்டாயிரத்து 500 ரூபாய், செடியை பதியம் செய்து பத்து நாட்களில் வேர் பிடித்த உடன் காய்க்க தொடங்கும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டு வரை காய்க்கும், நாட்டு எலுமிச்சை செடி பதியம் செய்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பலன் தர தொடங்கும். 150 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை செடிகள் விற்பனைக்கு உள்ளது. சிவகங்கை, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் சரக்கு வேனில் கொண்டு வந்து செடிகள் விற்பனை செய்வேன், என்றார்.

நாட்டு ரகம், ஹைபிரிட் ரகம் என இரண்டுமே விற்பனை செய்தாலும் பலரும் உடனுக்குடன் பலன் தரும் ஹைபிரிட் வகைகளையே விரும்புகின்றனர். திருப்புவனத்தில் தென்னை மரங்கள் ஜோடி 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாபாரிகள் பொள்ளாச்சி குட்டை ரக தென்னையை ஜோடி 500 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.

வன்னிகோட்டை சூர்யகண்ணன் கூறுகையில்: வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் வளர்த்து வருகிறேன், பெரும்பாலும் நன்கு பலன் தரும் செடிகளை பதியன் போட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி விடுவேன், எலுமிச்சை புது ரகம் என்பதால் வாங்கிச் செல்கிறேன், தற்போது மழை பெய்து வருவதால் செடிகள் நன்கு பசுமையாக வளரும், பனிப்பொழிவும் இருப்பதால் செடிகள் கருகாது, என்றார்.






      Dinamalar
      Follow us