/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி
/
கிராம சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி
ADDED : டிச 18, 2024 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீரசேகரபுரம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். பழைய அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் அகற்றப்பட்டது. புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை கட்டடம் கட்டும் பணி நடைபெறவில்லை.
அருகில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு கழிப்பறை, சமையலறை வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.