ADDED : ஆக 23, 2025 05:23 AM

காரைக்குடி : சாக்காட்டை அருகேயுள்ள அண்டக்குடியில் மாணவர்கள் இல்லாமல் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மித்ராவயல் ஊராட்சிக்குட்பட்ட அண்டக்குடியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடந்த நிலையில் இதுவரை மின் வசதி செய்து தரப்படவில்லை. அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் படித்து வந்த நிலையில், தற்போது மூன்று குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.
அந்த மூன்று குழந்தைகளும் நேற்று வராத நிலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது. தவிர இங்கு சமையலர் பணியிடமும் காலியாக உள்ளது.
ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே உள்ளார். அப்பகுதி மக்கள் கூறுகையில்: அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளை தற்போது புதுவயல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.
இதனால், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குழந்தைகளே இல்லாமல் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.