ADDED : நவ 06, 2025 07:33 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங் குன்றநாதர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பேஸ்கார் கேசவன் முன் னிலையில் உமாபதி சிவாச்சாரியார் அன்ன அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை நடத்தி வைத்தார்.
செந்தில், சண்முகம் தலைமையில் அன்னா பிஷேக விழா குழு வினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஐந்து ஊர் கிராம மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கிராம மக்கள் முன்னிலையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில் களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
* திருப்புத்துார் திருத் தளிநாதர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் திருத்தளிநாதருக்கு காலை 11:00 மணிக்கு ரமேஷ் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து அன்னம், காய்கறிகளால் மூலவர் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் அலங்காரத்திலிருந்து எடுக்கப் பட்ட அன்னத்துடன் சிவாச்சார்யார்கள், பக்தர்கள் கோயிலிலிருந்து புறப்பட்டு சீதளி தீர்த்தத்தில் அன்னம் கரைக்கப்பட்டது.
மானாமதுரை: மானா மதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் அன்னாபிஷேகத்திற்காக மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழங்கிய பச்சரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை கொண்டு சுவாமிக்கு அன்னம் சாற்றப்பட்டு அபிஷேகம் செய்தனர்.
நீர்நிலைகளில் வாழும் ஜீவராசிகளுக்கும் அன்னம் வழங்கும் வகையில் வைகை ஆற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. இளையான்குடி ஞானாம்பிகை அம்மன் சமேத ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக் கிராமம் வரகுனேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடந்தது.

