
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே சவுமியநாராயணபுரத்தில் வலம்புரி விநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடந்தது.
இக்கோயிலுக்கு கடந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடந்து, தற்போது ஒரு வருடம் பூர்த்தியானதை அடுத்து நேற்று வருடாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய கலசங்களால் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடந்தன. பூர்ணாஹூதிக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் விநாயகருக்கு அபிேஷகம் நடந்தது.
பின்னர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை கிராமத்தினர், இளைஞர்கள், விழாக் குழுவினர் செய்தனர்.

