ADDED : மார் 19, 2025 05:38 AM
தேவகோட்டை : நாச்சான்குளம் பள்ளி ஆண்டு விழா வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி தேவி தலைமையில் நடந்தது.
ஆசிரியர் திருவாத்தாள் வரவேற்றார். தலைமையாசிரியர் பூங்கொடி அறிக்கை வாசித்தார். ரோட்டரி சங்க நிர்வாகி அந்தோணி சேவியர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஆசிரியர் பயிற்றுநர் ராஜசேகரன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கற்களத்துார் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜான் மில்டன் பிராங்கிளின் வரவேற்றார். மேலாண்மை குழு உறுப்பினர் போதும் பொன்னு முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் அருண்குமார், செல்வம், கிருஷ்ணன், பயிற்றுநர் ராஜசேகரன், வி.ஏ.ஓ., சசிக்குமார் பரிசுகள் வழங்கினர். ஆசிரியை எமல்டா தேவி நன்றி கூறினார்.
* பறையன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது.
மேலாண்மை குழு தலைவர் அழகு ஜோதி, துணைத் தலைவர் சீதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் சங்கிலி முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைச் செயலாளர் சரத்குமார் வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர் ஸ்ரீவித்யா ஆண்டறிக்கையை வாசித்தார். செர்டு தன்னார்வ தொண்டு நிறுவனர் பாண்டி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நல்லாசிரியை விருது பெற்ற முத்துகாமாட்சி மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பறையங்குளம், கொன்னக்குளம் மக்கள் கலந்து கொண்டனர்.
மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி வீரலட்சுமி நன்றி கூறினார்.
* சிவகங்கை கற்பகா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது. கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமை வகித்தார். தாளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி இயக்குனர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மலைச்சாமி, இயக்குனர் குமரன் பேசினர். முதல்வர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
* கீழச்சிவல்பட்டி ஆர்.எம். மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் பழனியப்பன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், செயலாளர் குணாளன் முன்னிலை வகித்தனர்.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையுரையாற்றினார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் சமிரா, லிங்கேஸ், முத்துகுமாரசாமி ஆகியோருக்கு கேடயமும் சான்றிதழ் வழங்கினார்.சிவநெறிக்கழக தலைவர் பிச்சைக்குருக்கள் மாணவர்களுக்கு அருளாசி வழங்கினார். முதல்வர் பழனியப்பன் நன்றி கூறினார்.