ADDED : ஏப் 07, 2025 06:40 AM
தேவகோட்டை : கோடிக்கோட்டை செயின்ட் ஜோசப் இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவுக்கான இளம் தளிர் பட்டமளிப்பு விழா தலைமை நிர்வாக அலுவலர் பிரிஜெட் நிர்மலா தலைமையில் நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி கயல்விழி, வி.ஏ.ஓ. ஜெயசக்திவேல் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகி இருதயமேரி வரவேற்றார். முதல்வர் ரெஜிலின் அறிக்கை வாசித்தார். துணை முதல்வர் மரிய சார்லி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* திருப்புத்துார் அச்சுக்கட்டு ஊ.ஒ. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் குமார், சாந்தி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் இந்திரா வரவேற்றார். ஆசிரியர் லட்சுமணன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
கவுன்சிலர்கள் கோமதி சண்முகம், சையதுராபின்,நேரு, கல்விகுழு தலைவர் ராஜாமுகமது வாழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இடைநிலை ஆசிரியர் மாலினி நன்றி கூறினார்.
* திருப்புத்துார் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் பாபா அமீர்பாதுஷா தலைமை வகித்தார். சிவம் சிலம்ப பயிற்சிக்கழகத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.வரதராஜன் வரவேற்றார். பேராசிரியர் பாரிபரமேஸ்வரன் பங்கேற்றார்.
கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் சுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர் சர்க்கரைமுகமது, லயன்ஸ் நிர்வாகி ராஜகோபால், வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், லயன்ஸ் தலைவர் அபுதாகிர், தலைமை ஹாஜி கே.எம்.பாருக் ஆலிம்ஷா பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சந்தான லட்சுமி நன்றி கூறினார்.

