UPDATED : அக் 30, 2026 03:41 PM
ADDED : அக் 30, 2026 03:39 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி பவர் கிரிடு கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பில் கிராம சபை கூட்டம் ஓ.சிறுவயல் ஊராட்சியில் நடந்தது.
ஊராட்சி செயலர் கவிதா வரவேற்றார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலாளர் பார்த்தசாரதி ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார். கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அங்கையர்கண்ணி கலந்து கொண்டார். பவர் கிரிடு மேலாளர் பார்த்தசாரதி மாணவர்களுக்கு நேர்மையின் முக்கியத்துவம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
