/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்பார்ப்பு காரைக்குடி புறநகரில் பெருகும் அலுவலகம்; குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம்
/
எதிர்பார்ப்பு காரைக்குடி புறநகரில் பெருகும் அலுவலகம்; குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம்
எதிர்பார்ப்பு காரைக்குடி புறநகரில் பெருகும் அலுவலகம்; குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம்
எதிர்பார்ப்பு காரைக்குடி புறநகரில் பெருகும் அலுவலகம்; குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம்
ADDED : மார் 14, 2024 11:42 PM
காரைக்குடி : காரைக்குடி புறநகர் பகுதிகளுக்கு அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.காரைக்குடி நகரின் புறநகரில், திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பதிவாளர் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தவிர
மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி நேர அலுவலக புதிய கட்டடமும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டக்கல்லுாரி, மினி டைட்டல் பார்க் உள்ளிட்டவையும் தொடங்க உள்ளது.
காரைக்குடியில் வளர்ந்து வரும் முக்கியப் பகுதிகளான ஹவுசிங் போர்டு, என்.ஜி.ஓ., காலனி போக்குவரத்து நகர் வி.ஏ.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் குற்ற சம்பவங்களும் நடைபெறுகிறது.
இப்பகுதிகள் குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்டவையாகும். இதனால் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் தகவல் அறிந்து 15 கி.மீ., துாரத்தில் இருந்து போலீசார் வருவதற்கு தாமதமாகிறது. குற்றச்சம்பவங்களை உடனடியாக தடுப்பதற்கோ, குற்றவாளிகளை பிடிப்பதற்கோ அல்லது விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதற்கோ போலீசார் உடனடியாக வர முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதோடு உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு புறநகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில்:
காரைக்குடியில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக கழனிவாசல் என்.ஜி.ஓ., காலனி உள்ளது. தற்போது நகரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் அதிக வருவாய் வரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகமாக காரைக்குடி அலுவலகம் உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி பாதுகாப்பற்ற இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி விபத்தும், திருட்டு சம்பவங்களும் குற்றச்சம்பவங்களும் அதிகம் நடந்து வருகிறது. போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் குன்றக்குடி எல்லைக்குட்பட்டது என்று தெரிவித்து விடுகின்றனர். குன்றக்குடியில் இருந்து போலீசார் வருவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகிறது. அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

