/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்
/
சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்
ADDED : டிச 11, 2024 07:41 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான ஆய்வாக நுட்புநர் நிலை 3 காலிப்பணியிடம். துணை இயக்குநர் குடும்ப நலப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் தற்காலிக பணியிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பம் இன்று முதல் டிச.26 மாலை 5:00 மணி வரை வரவேற்கப்படுகிறது.
பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.inவேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை கலெக்டர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை தொலை பேசி எண் 04575- 240524 இந்த முகவரிக்கு டிச.26 மாலை 5:00 மணிக்குள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.