/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு துணை தேர்வுக்கு விண்ணப்பம்
/
கூட்டுறவு துணை தேர்வுக்கு விண்ணப்பம்
ADDED : பிப் 14, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் படித்து தேர்ச்சி பெறாதோர் மார்ச்சி-ல் துணைதேர்வு எழுதலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2002 முதல் 2021 வரை படித்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு (பழைய பாடத்திட்டம்) 2025 மார்ச் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்துணை தேர்வினை எழுத விரும்புவோர் பிப்., 16க்குள் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் துணை தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும், என்றார்.

