/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பம் டீன் சீனிவாசன் தகவல்
/
மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பம் டீன் சீனிவாசன் தகவல்
மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பம் டீன் சீனிவாசன் தகவல்
மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பம் டீன் சீனிவாசன் தகவல்
ADDED : செப் 05, 2025 11:47 PM
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பதாக கல்லுாரி டீன் சீனிவாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இக்கல்லுாரியில் 2025- - 2026ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பான மயக்க மருந்து டெக்னீசியன் 18, தியேட்டர் டெக்னீசியன் 19 இடங்கள் என 37 காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
2025 டிச.,ல் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை செப்., 8 முதல் 12 வரை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்., 12க்குள் சமர்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் செப்., 16 அன்று வெளியிடப்படும்.
மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் அக்., 6ம் தேதி முதல் துவங்குகிறது. இப்பாடப்பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள், விதிகளுக்கு உட்பட்ட வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெறுகின்றனர், என்றார்.