/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உழவர் நல மையம் துவக்க விண்ணப்பம்
/
உழவர் நல மையம் துவக்க விண்ணப்பம்
ADDED : நவ 06, 2025 06:53 AM
சிவகங்கை: சிவகங்கை வட்டாரத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை வணிகம், வேளாண்மை பொறியியல் துறையில் பட்டம், பட்டய படிப்பு முடித்த 20 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் உழவர் நல சேவை மையம் தொடங்க லாம். இந்த மையத்தை ரூ.10 முதல் ரூ.20 லட்சத்திற்குள் அமைக்க வேண்டும்.
வங்கி கடனுதவியுடன் துவங்குவோருக்கு திட்ட மதிப்பீட்டில் 30 சதவீத மானியம் அல்லது ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப் படும். விண்ணப்பிக்க விரும்புவோர் திட்ட அறிக்கையுடன், வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க ேவண்டும். வங்கி ஒப்புதல் கிடைத்ததும், மானியம் பெற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்கவும்.
மையம் துவக்கு வோரின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்று, பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, சரக்கு, சேவை வரி எண், பான் கார்டு, ஜாதி சான்று, வங்கி கணக்கு புத்தகம், கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கவும் என்றார்.

