/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்தனேந்தலில் முடிவு பெறாத சர்வீஸ் ரோடு: மக்கள் கடும் அவதி பொது மக்கள் கடும் அவதி
/
முத்தனேந்தலில் முடிவு பெறாத சர்வீஸ் ரோடு: மக்கள் கடும் அவதி பொது மக்கள் கடும் அவதி
முத்தனேந்தலில் முடிவு பெறாத சர்வீஸ் ரோடு: மக்கள் கடும் அவதி பொது மக்கள் கடும் அவதி
முத்தனேந்தலில் முடிவு பெறாத சர்வீஸ் ரோடு: மக்கள் கடும் அவதி பொது மக்கள் கடும் அவதி
ADDED : நவ 06, 2025 06:52 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தல் 4 வழிச் சாலையில் முடிவு பெறாத சர்வீஸ் ரோட்டால், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது உயிர்பலி ஏற் படுகிறது. இதை தவிர்க்க சர்வீஸ் ரோடு முழுமை யாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இரு வழிச்சாலையாகவும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் தினம் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள முத்த னேந்தல் பகுதி யில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன பிறகும் இரண்டு புறங் களிலும் சர்வீஸ் ரோடு பணிகள் முழுமை பெறவில்லை.
மேலும் இங்கு பஸ் ஸ்டாப் வசதிகளும் இல்லாததால், ரோட்டை கடக்கும் போதும், பஸ்சில் ஏறி, இறங்கும் போதும் வாகனங்களில் அடிபட்டு இது வரை 40 பேர் வரை பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு டூவீலரில் சென்ற போலீஸ்காரர் செல்வகுமார் முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதியதில் பலியானார்.
எனவே சர்வீஸ் ரோட்டை முழுமையாக முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தனேந்தலைச் சேர்ந்த கிருஷ்ணன் கூறியதாவது:
முத்தனேந்தலில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இரு புறங் களிலும் பஸ் ஸ்டாப் வசதி இல்லை.
இதனால் நான்கு வழிச்சாலையிலேயே பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்ற னர். இதனால் வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. எனவே சர்வீஸ் ரோட்டை முழுமையாக கட்ட வேண்டும். மேலும் இரு பகுதியிலும் பஸ்கள் நின்று செல்ல பஸ் ஸ்டாப் கட்டித்தர வேண்டும் என்றார்.

