/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பம்
/
உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பம்
ADDED : செப் 13, 2025 04:02 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடல் தானம் தருவதாக 43 பேர் அதற்குரிய விண்ணப்பம் அளித்தனர்.
சிவகங்கை மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகத்தில் முன்னாள் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரித்தனர். மாவட்ட செய லாளர் மோகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு சேதுராமன், கருப்புசாமி, வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, மணியம்மா, ஆறுமுகம், சுரேஷ் அய்யம்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உலகநாதன், தென்னரசு, சந்தியாகு, முனியராஜ், ஈஸ்வரன், காந்திமதி பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சியை சேர்ந்த 43 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடல்களை தானமாக வழங்குவதற்கான விண்ணப்பத்தை, மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச் சுணனிடம் வழங்கினர்.