/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய அரசின் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
மத்திய அரசின் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 27, 2025 11:51 PM
சிவகங்கை: மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருது பெற விண்ணப்பம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணி, தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களுக்கு 2026 ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளன. மத்திய அரசின் https://padmaawards.gov.in'' என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு, அதன் 3 நகல்களை ஜூன் 30 க்குள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் கலெக்டரின் பரிந்துரை கடிதத்துடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.