ADDED : செப் 11, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை கோட்டாட்சியராக, திருநெல்வேலியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பயிற்சி துணை கலெக்டராக இருந்த டி.ஜெபி கிரேசியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2024 ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், மாநில அளவில் 9 வது ரேங்க் பெற்றுள்ளார். திருநெல்வேலியில் ஓராண்டு பயிற்சி முடித்த நிலையில், சிவகங்கை கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.