ADDED : நவ 28, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 போலீசாருக்கு பணி நியமன ஆணைகளை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சிவகங்கையில் நேற்று 15 ஆயுதப்படை போலீசார், 34 சிறப்புக் காவல்படை போலீசார், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை போலீசார் உள்ளிட்ட 69 பேருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் வழங்கினார்.
தமிழக சிறப்புக் காவல் படை 9ஆம் அணி தளவாய் கார்த்திகேயன், கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், துணைத் தளவாய் ஸ்ரீதேவி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி அலுவலர் செந்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அசோக் ராஜ்குமார், நிர்வாக அலுவலர் கணக்கு வசந்தகுமாரி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள், எஸ்.ஐ., சரவணபோஸ் கலந்துகொண்டனர்.