/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா
/
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : செப் 13, 2025 11:35 PM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வர்த்தகர் சங்கம், கிறிஸ்துராஜா லியோ சங்கத்தினர் இணைந்து நல்லாசிரியர் விருது- பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர்.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி துவக்கிவுரையாற்றினார். பள்ளித் தலைவர் ரூபன் அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் சிதம்பரம் ஆசிரியர் சிறப்புக்களை கூறினார்.
முன்னாள் மாணவர் ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனர் எழிலரசு பங்கேற்றார். டாக்டர் ஆதிலெட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நல்லாசிரியர்கள் சாக்கோட்டை ஆர்.முருகேஸ்வரி, கோவிலுார் எம்.ராமர்,கண்ணங்குடி எம்.பாக்கியம், சேம்பார் யூ.சுரேஷ், சிவகங்கை என்.மரியசெல்வி, மணலுார் ஆர்.முருகேசன், மொட்டையன் வயல் கே.விஜயராணி, பசியாபுரம் ஆர்.ரெஜினா ஞானசெல்வி, காரைக்குடி கே.ரவிக்குமார் கெளரவிக்கப்பட்டனர்.
பள்ளித் தலைவர் ஏ.டி.விக்டரின் 50ம் ஆண்டு கல்விப்பணி நிறைவை முன்னிட்டு கவுரவப் படுத்தப்பட்டார்.