UPDATED : செப் 26, 2026 04:29 PM
ADDED : செப் 26, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முதல்வருக்கு பாராட்டு விழா மற்றும் ஏ.ஐ., ஆப் அறிமுக விழா நடந்தது.
முதல்வர் குமார் நல்லாசிரியர் விருது பெற்றார். அவருக்கு வித்யாகிரி கல்வி நிறுவனங்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. துணை வேந்தர் ஜெயகாந்தன், அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் வேதிராஜன், கனரா வங்கி முதன்மை மேலாளர் விட்டல் மல்லப்பா பாராட்டினர். பள்ளி தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். தொடர்ந்து பிளஸ் 2 மாணவர் ஹமீத் ஷெரிப் உருவாக்கிய மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் ஏ.ஐ., அப்ளிகேஷன் அறிமுக விழா நடந்தது. வித்யாகிரி கல்வி நிறுவன தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா, முதல்வர் ஹேமமாலினி, ஆடிட்டர் இளைய பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
