ADDED : டிச 30, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா, 80 வயது ஓய்வூதியர்களுக்கு பாராட்டு விழா வட்ட கிளைத் தலைவர் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது.
செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். துணைத் தலைவர் சுப்பையா, துணைச்செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ராமையா, செல்வசுந்தரி முன்னிலை வகித்தனர். உதவி கருவூல அலுவலர் ராஜா, முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட், மாவட்டத் தலைவர் திரவியம், செயலாளர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் பாக்கியம், மாநிலச் செயலாளர் முத்துராமலிங்கம் பேசினர். வட்டக்கிளை பொருளாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.

