ADDED : ஜன 28, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவியர் பங்கேற்ற 'பேச்சரங்கம்' நடந்தது. கல்வியாண்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
முதல்வர் தபசம் கரிம் வரவேற்றார். பள்ளித்தாளாளர் ரூபன் அறிமுகவுரையாற்றினார்.
பேராசிரியை ஹேமமாலினி நடுவராக பணியாற்றினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தக் கல்வி ஆண்டில் படிப்பு மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த,கல்வி சாரா செயல்பாடுகளில் சாதனைகள் புரிந்த மாணவ, மாணவிகளுக்கு நட்சத்திர மாணவர் விருது வழங்கப்பட்டது. மாணவர் தலைவி தர்ஷினி நன்றி கூறினார்.