ADDED : ஜூன் 26, 2025 01:08 AM
சிவகங்கை: காரைக்குடியில் விஸ்வகுல மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்க விருது வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட அளவில் விஸ்வகர்ம சமூகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 104 மாணவர்களுக்கு கல்வி ஊக்க விருது, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் அன்பழகன், பேராசிரியை எஸ்.கீதா, பேராசிரியர் டி.கண்ணன், வழக்கறிஞர் சொர்ணம், டாக்டர் பிரவீன் குமார் பங்கேற்றனர்.
விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில துணை தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட தலைவர் ஆர்.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் கருப்பையா, அமைப்பு செயலாளர் ராமசாமி, அவைதலைவர் முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்மதி நாகராஜன், விஸ்வகர்மா சமூக முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் சோலைமலை, செயலாளர் கருப்பையா, பொருளாளர் அழகர்சாமி, கமிட்டி தலைவர் வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.