/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை உதய தின விழா சான்றோர்களுக்கு பாராட்டு
/
சிவகங்கை உதய தின விழா சான்றோர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 28, 2025 05:34 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடந்த சிவகங்கை உதய தின விழா' வில் சான்றோர்களுக்கு நினைவு பரிசு, புத்தகம் வழங்கி பாராட்டினர்.
மன்னர் விஜயரகுநாத சசிவர்ண உடைய தேவரால் 1734 ம் ஆண்டு சிவகங்கை உருவாக்கப்பட்டது. இந்நகரம் தோன்றி நேற்று 296ம் ஆண்டு துவக்கநாள் நடந்தது. விழாவிற்கு தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார்.
மன்னர் பள்ளிக்குழு தலைவர் ஆர்.மகேஷ்துரை முன்னிலை வகித்தார்.
மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என்.சுந்தரராஜன் வரவேற்றார். சசிவர்ண தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பேராசிரியர் விவேகானந்தன் எழுதிய சசிவர்ண தேவர் நுாலை மதுராந்தகி நாச்சியார் வெளியிட, நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் பெற்றார்.
மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, நல்லாசிரியர் கண்ணப்பன், தமிழ்மன்ற தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி சையது, அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி பங்கேற்றனர்.
நல்லாசிரியர் பகீரதநாச்சியப்பன், வரலாற்று ஆய்வாளர் (தலைமை ஆசிரியர் ஓய்வு) எம்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் விவேகானந்தன், கவிஞர் இலக்கியா நடராஜன், அப்துல் முத்தலிப், திருப்பணி செல்வர் ஆர்.ராதா, தொல்லியல் ஆர்வலர் காளிராஜா ஆகியோருக்கு நினைவு பரிசு, புத்தகம் வழங்கி விழாக்குழுவினர் கவுரவித்தனர். சி.பிரபாகரன் நன்றி கூறினார்.