/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஐ.டி.ஐ.,யில் நவ. 10ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
/
ஐ.டி.ஐ.,யில் நவ. 10ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
ஐ.டி.ஐ.,யில் நவ. 10ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
ஐ.டி.ஐ.,யில் நவ. 10ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
ADDED : நவ 07, 2025 04:10 AM
சிவகங்கை: பிரதமரின் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நவ., 10 அன்று சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் நடக்கிறது.
இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நேரடி பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கையை நடத்துகிறது. முகாம் அன்று காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் புதிய நிறுவனங்களும் பங்கேற்று 'அப்ரன்டிஸ்சிப் போர்டலில்' பதிவு செய்து, பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம்.
இப்பயிற்சிக்கு ஐ.டி.ஐ.,ல் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., பயிற்சி பெற்று தேர்வான பயிற்சியாளர்களும், புதிய அப்ரன்டிஸ்சிப் பயிற்சிக்கு 8 மற்றும் 10 ம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி முடித்த மாணவர்கள் பயன்பெறலாம். கூடுதல் விபரத்திற்கு 93421 92184ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.