/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புளியால் பள்ளி ரோடு சீரமைக்க கோரிக்கை
/
புளியால் பள்ளி ரோடு சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 07, 2025 04:12 AM

தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் புளியாலில் பள்ளிக்கு செல்லும் சேதமடைந்த ரோட்டை புதுப்பிக்க பெற்றோர்கள்,கிராமத்தினர் கோரியுள்ளனர்.
புளியாலில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பல சிரமங்களை கடந்து தான் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் ரோட்டில் பல ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இரு நாட்கள் பெய்த மழையில் இந்த ரோடு சகதிக்காடாகி விட்டது. போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்வு காணப்படவில்லை.
கிராமசபா கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்த திட்டத்தில் ரோடு பணியை சேர்ப்பது என்று அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.
பள்ளிக்கு மட்டுமல்ல கிராம மக்கள் மருத்துவமனைக்கும் இந்த ரோட்டில் தான் செல்ல வேண்டும். மேலும், இந்த ரோட்டின் வழியாக இலுப்பக்குடி, நெய்வயல், அம்மனி,சிறுகை, மடத்துனேந்தல், சீர்தாங்கி, மனப்புஞ்சை, நெட்டேந்தல், இளங்குன்றம் கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். விரைவாக ரோட்டை சீரமைக்க இப்பகுதி கிராமத்தினர் கோரியுள்ளனர்.

