ADDED : ஆக 06, 2025 08:31 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஆக.,11 ல் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்குனரகம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஆக., 11 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். இதில் மத்திய, மாநில அரசு நிறுவனம் உட்பட 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இச்சேர்க்கையை நடத்த உள்ளனர். புதிய தொழில் நிறுவனங்களும் பங்கேற்று, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
அப்ரன்டிசிப் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., பயிற்சி பெற்று தேர்வான பயிற்சியாளர்களும், புதிய அப்ரன்டிசிப் பயிற்சிக்கு எட்டு, 10, பிளஸ் மற்றும் பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 93421 92184ல் தொடர்பு கொள்ளலாம். உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக முதல் மாடி, சிவகங்கைக்கு நேரடியாக வந்து விபரங்களை கேட்டு அறியலாம், என்றார்.