/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடையில் விரல் ரேகை பதிய ஏப். 30 கடைசி வாய்ப்பு
/
ரேஷன் கடையில் விரல் ரேகை பதிய ஏப். 30 கடைசி வாய்ப்பு
ரேஷன் கடையில் விரல் ரேகை பதிய ஏப். 30 கடைசி வாய்ப்பு
ரேஷன் கடையில் விரல் ரேகை பதிய ஏப். 30 கடைசி வாய்ப்பு
ADDED : ஏப் 14, 2025 05:20 AM
சிவகங்கை: ரேஷன் கடைகளில் ஏப்., 30 க்குள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்), முன்னுரிமை (பி.எச்.எச்.,) கார்டுகளை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது கை ரேகைகளை கட்டாயம் ஏப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.
இம்மாவட்டத்தில் 46,339 ஏ.ஏ.ஒய்., கார்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 838 உறுப்பினர்கள். இவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 495 பேர் விரல் ரேகைகளை பதிவு செய்துள்ளனர். அதே போன்று முன்னுரிமை (பி.எச்.எச்.,) கார்டுகள் 1 லட்சத்து 91 ஆயிரத்து 710 வரை உள்ளன.
இதில், 5 லட்சத்து 98 ஆயிரத்து 433 உறுப்பினர்கள். இவர்களில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 209 பேர் விரல் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இது வரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 567 உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. விரைந்து அனைத்து உறுப்பினர்களும் விரல் ரேகைகளை ஏப்., 30 க்குள் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.