/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்
/
போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்
ADDED : செப் 29, 2024 11:52 PM

சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்டில் சாக்கடை கால்வாய் துார்வாருவதற்காக அதன் மீது வைக்கப்பட்ட கடைகளை அகற்றிய போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழை முன் நடவடிக்கையாக சாக்கடை கால்வாயில் தேங்கிய மணல், கழிவுகளை அகற்றி வரப்படுகிறது.
நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் கால்வாய் துார்வாரும் பணி நடந்தது. அப்போது கால்வாயின் மேற்பரப்பில் இருந்த தள்ளுவண்டி கடைகளை இன்ஸ்பெக்டர் அன்னராஜா, எஸ்.ஐ., சண்முக பிரியா ஆகியோர் அகற்ற கூறினர். போலீஸ் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றினர்.
இதில் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் பஸ் ஸ்டாண்ட் முன் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின் கால்வாய் கழிவுகளை அகற்றினர்.

