/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நவ.16ல் கலைத்திறன் போட்டி கள்
/
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நவ.16ல் கலைத்திறன் போட்டி கள்
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நவ.16ல் கலைத்திறன் போட்டி கள்
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நவ.16ல் கலைத்திறன் போட்டி கள்
ADDED : நவ 13, 2024 08:18 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நவ., 16 ல் நடைபெறும் என இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கலை பண்பாட்டு துறையின் கீழ், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் வயது 5 முதல் 16 க்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கலைப்பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதம், ஓவியம், கிராமிய நடன போட்டிகள் நடத்தப்படும்.
வயது 5 முதல் 8, வயது 9 முதல் 12, வயது 13 முதல் 16 என மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்படும். வயது 9 முதல் 12, வயது 13 முதல் 16 பிரிவினருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு, மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு, சான்று வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டி நவ., 16 அன்று சிவகங்கை பனங்காடி ரோடு, கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே உள்ள அரசு இசைப்பள்ளியில் போட்டி நடைபெறும். இதற்கான முன்பதிவு நவ., 16 அன்று காலை 9:00 மணிக்கு நடக்கும்.
பரதம், குரலிசை, கிராமிய நடனம் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை நடக்கும். ஓவியம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும். மாணவ, மாணவிகள் பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விபரங்களுடன், வயது சான்றுடன் வர வேண்டும். பரதத்தில் கலந்து கொள்வோர் பரதம், குச்சிப்புடி, மோகனி ஆட்டம் ஆடலாம். முழு ஒப்பனை, உரிய உடைகளுடன் நடனம் இருக்க வேண்டும். சினிமா பாடல், மேற்கத்திய இசை நடனம், குழுநடனத்திற்கு அனுமதியில்லை.
ஒவ்வொரு நடனத்திற்கும் 3 முதல் 5 நிமிடம் ஒதுக்கப்படும். குரலிசை போட்டியிலும் கர்நாடக இசை, தேசிய பாடல், சமூக விழிப்பணர்வு, நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவியப்போட்டிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மாணவர்களே எடுத்து வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 97863 41558 ல் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம், என்றார்.

