ADDED : ஜூலை 10, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆனி மூல நட்சத்திரத்தில் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை,பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து திருப்புகழ் பாடல் பாராயணம் செய்யப்பட்டு அருணகிரிநாதரையும், முருகப்பெருமானையும் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.ஏற்பாடுகளை இளையான்குடி திருப்புகழ் சபையினர் செய்திருந்தனர்.