/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி
/
ஆலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி
ADDED : பிப் 15, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது.
காரைக்குடி செக்காலை சகாய மாதா சர்ச் மற்றும் செக்காலை குழந்தை தெரசாள் சர்ச்சில் சாம்பல் புதன் திருப்பலி நடந்தது.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி கடைபிடிக்கப்படுகிறது. புனித வெள்ளி வரை நோன்பு இருந்து முக்கிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருவர்.
நேற்று செஞ்சை குழந்தை தெரசாள் சர்ச்சில் பங்குத்தந்தை மரிய அந்தோணி, அருள் சகோதரி ஆரோக்கிய மேரி சாம்பல் பூசி ஆசி வழங்கினர்.

