/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சட்டசபை கணக்கு குழு ஆய்வு கூட்டம்
/
சட்டசபை கணக்கு குழு ஆய்வு கூட்டம்
ADDED : ஜன 25, 2025 05:39 AM

சிவகங்கை : சிவகங்கையில் சட்டசபை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித், சட்டசபை பொது கணக்கு குழு தலைவர்செல்வபெருந்தகை தலைமையில் நடந்தது.
பொது கணக்கு குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி, பி.அப்துல் சமது, எழிலரசன், முகம்மது ஷாநவாஸ், சட்டசபை இணை செயலாளர் பி.ரேவதி பங்கேற்றனர்.
இக்குழுவினரை அமைச்சர் பெரியகருப்பன்வரவேற்று சென்றார்.
இக்குழுவினர் காரைக்குடி வளர் தமிழ் நுாலகம், குன்றக்குடியில் அரசு இலவச வீடு திட்டம், புதிய அங்கன்வாடி மையம், தென்மாபட்டு கிராமத்தில்அம்ரூத் திட்டத்தில் கட்டிய குடிநீர் மேல்நிலை தொட்டி, திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை- மேலுார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றியபள்ளிகளை பார்வையிட்ட இடங்கள்குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.
கூட்டத்தில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத், தேவகோட்டை சப்-- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட வன அலுவலர் பிரபா, திட்ட இயக்குனர் வானதி, கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துகழுவன், கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.