/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
/
நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 20, 2025 11:06 PM
சிவகங்கை: பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் முழு மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அளிக்கப்படும் என காளையார்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் வடிவேல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, காளையார்கோவில் வட்டாரத்திற்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 206 எக்டேரில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாய சான்று, நில வரைபடம், ரேஷன், ஆதார் கார்டுடன் காளையார்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம், என்றார்.