/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயற்கை விவசாயத்தில் 1318 எக்டேரில் பயிர்கள் உதவி இயக்குனர் தகவல்
/
இயற்கை விவசாயத்தில் 1318 எக்டேரில் பயிர்கள் உதவி இயக்குனர் தகவல்
இயற்கை விவசாயத்தில் 1318 எக்டேரில் பயிர்கள் உதவி இயக்குனர் தகவல்
இயற்கை விவசாயத்தில் 1318 எக்டேரில் பயிர்கள் உதவி இயக்குனர் தகவல்
ADDED : மே 20, 2025 12:53 AM
சிவகங்கை: மாவட்டத்தில் இந்த ஆண்டு 1318 எக்டேரில்இயற்கை விவசாயம் செய்து பலன் பெற்றுஉள்ளனர் என சிவகங்கை உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் சக்திகணேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறு வகை, எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிர்களுக்கான விதைகளை உருவாக்கும் விவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
2024-2025 ம் ஆண்டில் மட்டுமே 541.13 எக்டேர் விவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விதைப்பண்ணை மூலம் உற்பத்தி செய்த விதைகளின் தரத்தினை ஆய்வு செய்து, நடப்பு ஆண்டில் (2024--2025) 609.28 டன் விதைகளுக்கு தரமான விதைகள் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உயிர்ம உற்பத்தி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயமாக நெல், மா, கொய்யா, சப்போட்டா, டிராகன் பழ கன்றுகள், தென்னை மரங்கள் வளர்த்து வருகின்றனர்.
இயற்கை உரங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டு 1,318 எக்டேர் நிலங்களுக்கு இயற்கை விவசாயத்திற்கான சான்று அளித்துள்ளோம், என்றார்.