/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு சங்கம் வலியுறுத்தல்
/
ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு சங்கம் வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2024 01:21 AM

சிவகங்கை:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை அலுவலர், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்க முதல்வர் சிறப்பு நிதியில் ரூ.25 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:
தமிழக அளவில் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பு ஆசிரியர், பிசியோதெரபிஸ்ட், கணக்கு, தணிக்கை மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் என 15,000 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கான செப்., சம்பளத்தை தமிழக அரசு இது வரை வழங்கவில்லை. எனவே தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் சிறப்பு நிதியாக ரூ.25 கோடியை விடுவிக்க வேண்டும். மாநில அரசு தன் பங்களிப்பு தொகையான 40 சதவீத நிதியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறைக்கு விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசு 2024--- 2025ம் ஆண்டின் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ.573 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாநில அளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளோம். சம்பளத்தை விடுவிக்காவிடில், அடுத்த கட்ட போராட்டத்தை ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நடத்த உள்ளோம். இந்த நிலை நீடித்தால், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும், என்றார்.