/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதார ஆய்வாளர், அலுவலருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் அரசுக்கு சங்கம் கோரிக்கை

ADDED : மார் 27, 2025 03:04 AM

சிவகங்கை:மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர், அலுவலர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசுக்கு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 23 மாநகராட்சி, 151 நகராட்சிகளில் சுகாதார பணிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர், அலுவலர்கள் உள்ளனர். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி தவிர்த்து மாநில அளவில் 450 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களை 3 ஆண்டிற்கு ஒரு முறை பணியிட மாறுதல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில சுகாதார ஆய்வாளர், அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் எம்.மணிவண்ணன் கூறியதாவது: காலிப்பணியிடங்களை மறைத்து சுகாதார ஆய்வாளர், அலுவலர்களை பல கி.மீ., துாரத்திற்கு பணியிட மாற்றம் செய்கின்றனர். இதை தவிர்த்து ஆசிரியர்கள் போன்று கவுன்சிலிங் மூலம் ஒளிவுமறைவின்றி பணியிட மாறுதல், பதவி உயர்வு வேண்டும். 200 கி.மீ.,துாரத்திற்கு மேல் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிபவர்களை, சொந்தமாவட்டத்திற்கு அருகில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அமைச்சரிடம் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.