/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் புதிய தேர் தயார்
/
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் புதிய தேர் தயார்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் புதிய தேர் தயார்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் புதிய தேர் தயார்
ADDED : பிப் 04, 2024 11:46 PM
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில், புதிய தேர் தயாரான நிலையில், வெள்ளோட்டம் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தேர் வெள்ளோட்டம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி., பி.கே., அர்விந்த், தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர் வெள்ளோட்டம் நடத்த அனைத்து தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜன.,21 அன்று நடத்த முடிவு செய்தனர். இதற்கிடையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகைக்கான பாதுகாப்பிற்கு போலீசார் சென்றதால், தேர் வெள்ளோட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
பிப்.,11 ல் தேர் வெள்ளோட்டம்
இந்நிலையில் இத்தேர் வெள்ளோட்டத்தை பிப்., 11 ல் தேவஸ்தான ஊழியர்களை வைத்து நடத்துவதென முடிவு செய்தனர். இதற்காக கடந்த 20 நாட்களாக கண்டதேவி கோயிலை சுற்றியும், தேரோடும் வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிப்., 11 அன்று காலை 6:00 முதல் 8:00 மணிக்குள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. இதற்காக தேரோடும் வீதிகளில் 18 முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்கள் நிரந்தரமாக இருக்கும் விதத்தில் பொருத்தியுள்ளனர். தேர் வெள்ளோட்டத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், எஸ்.பி., பி.கே., அர்விந்த் ஆலோசனைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

