/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ. 240க்கு விற்ற பாகற்காய்
/
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ. 240க்கு விற்ற பாகற்காய்
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ. 240க்கு விற்ற பாகற்காய்
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ. 240க்கு விற்ற பாகற்காய்
ADDED : பிப் 16, 2024 05:26 AM
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூபாய் 240 க்கு விற்பனையானது. பிற காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
சின்ன பாகற்காய் கடந்த வாரங்களில் கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் பெரிய பாகற்காய் ஒரு கிலோ ரூ.40லிருந்து ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்டது.
மற்ற பொருட்களான தக்காளி ஒரு கிலோ ரூ.25க்கும், கத்தரிக்காய் ரூ.60லிருந்து ரூ. 80வரைக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 40க்கும், சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100க்கும், பெரிய வெங்காயம் 4 கிலோ ரூ.100க்கும்,வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 40 என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.