/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சந்தையில் அதலை, பாகற்காய் கிலோ ரூ.350க்கு விற்பனை
/
மானாமதுரை சந்தையில் அதலை, பாகற்காய் கிலோ ரூ.350க்கு விற்பனை
மானாமதுரை சந்தையில் அதலை, பாகற்காய் கிலோ ரூ.350க்கு விற்பனை
மானாமதுரை சந்தையில் அதலை, பாகற்காய் கிலோ ரூ.350க்கு விற்பனை
ADDED : டிச 26, 2025 05:34 AM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் மருத்துவ குணமிக்க அதலை மற்றும் பாகற்காய் ஒரு கிலோ ரூ.350 க்கு விற்பனை செய்தாலும் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மானாமதுரையில் வியாழன் தோறும் சந்தை நடைபெறும். இங்கு மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடியில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து விற்பனையில் ஈடுபடுவார்கள். சந்தையில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக கருதப்படும் மருத்துவ குணமிக்க சின்ன பாகற்காய், கரிசல் மண்ணில் விளையும் அதலைக்காய் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன.
சர்க்கரை நோயாளிகளிடம் இந்த காய்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்ததால்,நேற்று கிலோ ரூ.350 வரை விற்றது. இங்கு சின்ன வெங்காயம் கிலோ ரூ. 60, பெரிய வெங்காயம் ரூ.40, தக்காளி ரூ.60, கத்தரிக்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, பீன்ஸ்,கேரட், முள்ளங்கி, அவரை ரூ. 60, உருளை ரூ.60க்கும் விற்கப்பட்டன.