ADDED : நவ 23, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே பார் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே உள்ள இடையர் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் 53, நண்பர்களுடன் நேற்று மாலை 5:30 மணிக்கு பீர் குடித்துள்ளார்.
மீண்டும் அதே பிராண்ட் பீரை கேட்டுள்ளார். ஊழியர்கள் அந்த பிராண்ட் தீர்ந்து விட்டது. வேறு பிராண்ட் பீர் வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
ஏன் அதே பீர் இல்லை என்று சொல்கிறீர்கள் எனக் கூறி அலைபேசியில் போட்டோ, வீடியோ எடுக்க முயற்சி செய்த போது அங்கிருந்த ஊழியர்களும் மற்றவர்களும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
இதில் கண்ணனுக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

